www.garudabazaar.com

பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல் - ஃபோட்டோ பகிர்ந்து அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நகுல். பின்னர் அவர் ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். 

Actor Nakkhul blessed with baby girl, pics goes Viral | பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்

நடிகராக மட்டுமல்லாமல் தமிழில் ஏராளமான பாடல்களை பாடி பாடகராகவும் அறியப்படுகிறார். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றிருந்தார். பிரபல நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் என்பது அனைவரும் அறிந்தது தான்.

 Actor Nakkhul blessed with baby girl, pics goes Viral | பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்

நடிகர் நகுல் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று (02/08/2020) பெண் குழந்தை பிறந்தது. இதனை நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 Actor Nakkhul blessed with baby girl, pics goes Viral | பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்

 

 Actor Nakkhul blessed with baby girl, pics goes Viral | பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்

Tags : Nakul, Nakkhul

Actor Nakkhul blessed with baby girl, pics goes Viral | பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்

People looking for online information on Nakkhul, Nakul will find this news story useful.