www.garudabazaar.com

'வாரிசு' -ல விஜய்யின் தாத்தா ஜெமினி கணேசனா? டிரெய்லரில் இடம்பெற்ற Viral காட்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

is that Veteran Actor Gemini Ganesan in Varisu Trailer

Also Read | பீஸ்ட் சாதனையை 1 மணி நேரத்தில் முறியடித்த வாரிசு டிரெய்லர்.. Varisu Trailer  

நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Veteran Actor Gemini Ganesan Photo in Varisu Trailer

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் அனைத்து 5 பாடல்களும் வெளியாகியுள்ளன.

Veteran Actor Gemini Ganesan Photo in Varisu Trailer

இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரிசு படத்தின் டிரெய்லரில், ஒரு காட்சியில் நடிகர் விஜய் வீட்டின் பின்னணியில் ஒரு பழம் பெரும் தமிழ் நடிகரின் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டுள்ளது.

Veteran Actor Gemini Ganesan Photo in Varisu Trailer

பார்ப்பதற்கு அந்த ஃபோட்டோ மறைந்த பழம்பெரும்  நடிகர் ஜெமினி கணேசனின் ஃபோட்டோ போல் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு டிரெய்லரில் வரும் காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் ஜெய சுதா ஓரத்தில் சோகமாக நிற்க பிண்ணனியில் அந்த புகைப்படம் அலங்காரம் செய்து விளக்கேற்றி வைக்கப்பட்டுள்ளது.

Also Read | VARISU: "ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தன தான் பாப்பாங்க".. ACTION காட்சிகளுடன் வெளியான டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

is that Veteran Actor Gemini Ganesan in Varisu Trailer

People looking for online information on Gemini ganesan, Varisu, Varisu Trailer, Veteran Actor, Vijay will find this news story useful.