www.garudabazaar.com

"அட, சூப்பர்ல".. வாரிசு ட்ரைலரில் இடம்பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. Varisu Trailer!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.

Bigg boss fame in thalapathy Vijay varisu trailer

Also Read | "பெயிடு ஹாஸ்டல்லயா இருக்கீங்க".. ‘நேருக்கு நேர்’.. அசிம் Vs ரச்சிதா... அனல் பறந்த வாதம்..! Bigg Boss 6 Tamil

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Bigg boss fame in thalapathy Vijay varisu trailer

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. அதே போல, பல்வேறு சாதனைகளையும் இந்த ட்ரைலர் படைத்து வருகிறது.

Bigg boss fame in thalapathy Vijay varisu trailer

படத்தின் ட்ரைலரில் வரும் காட்சிகளின் அடிப்படையில், சரத்குமார் விஜய்க்கு அப்பாவாகவும், ஜெயசுதா அம்மாவாகவும் நடித்துள்ளனர். மேலும் ஷாம், ஶ்ரீ காந்த் ஆகியோர் விஜய்யின் சகோதரர்களாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் வில்லனாக டிரெய்லரில் தோன்றியுள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் & செண்டிமெண்ட் காட்சிகளுடன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. "ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தன தான் பாப்பாங்க ஆட்ட நாயகன்" என்ற வசனம் டிரெய்லர் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

Bigg boss fame in thalapathy Vijay varisu trailer

இந்த நிலையில், வாரிசு ட்ரைலரில் பிக் பாஸ் பிரபலம் இடம்பெற்றுள்ள விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது. ட்ரைலரில் வரும் சண்டைக் காட்சிகள் மத்தியில் பிரகாஷ் ராஜ் அருகே பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நிற்கிறார். இவர் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

அவர் ஏற்கனவே வாரிசு படத்தில் நடித்திருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது ட்ரைலரில் அவர் வரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

Also Read | "அவரும் Biased-ஆ இருக்காரு". அப்போ விக்ரமன சுத்தமா புடிக்கல, ஆனா".. மைனாவிடம் பேசிய ADK

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss fame in thalapathy Vijay varisu trailer

People looking for online information on Bigg boss, Bigg boss fame in Varisu Trailer, Thalapathy Vijay, Varisu, Varisu Trailer, Vijay will find this news story useful.