www.garudabazaar.com

விஜய் பத்தி சொல்லுங்க... ரசிகர் கேட்ட கேள்விக்கு ஷாருக்கான் சொன்ன சூப்பர் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

Shahrukh Khan Answered about Thalapathy Vijay on Twitter

Also Read | வாரிசு டிரெய்லர்.. விஜய் வீட்டின் ஃபோட்டோவில் இருக்கும் பழம் பெரும் நடிகர் இவரா..?

ஷாருக்கான், கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

Shahrukh Khan Answered about Thalapathy Vijay on Twitter

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Shahrukh Khan Answered about Thalapathy Vijay on Twitter

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Shahrukh Khan Answered about Thalapathy Vijay on Twitter

இந்நிலையில் பதான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஷாருக்கான் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர் "விஜய் குறித்து கூறுங்கள்" என‌ கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், விஜய் மிகவும் இனிமையானவர் மற்றும் அமைதியானவர். எனக்கு ஒருமுறை அன்பு நிறைந்த டின்னர் விருந்து அளித்தார்". என ஷாருக்கான் பதில் அளித்துள்ளார்.

Also Read | கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்'.. நடிகராக படத்தில் இணைந்த பிரபல DOP.. ஷூட்டிங் எங்கே?

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan Answered about Thalapathy Vijay on Twitter

People looking for online information on Shah Rukh Khan, Thalapathy Vijay, Varisu, Varisu Trailer, Vijay will find this news story useful.