நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த ஃபோட்டோவில் தளபதி விஜய் 'சதுரங்க வேட்டை' பட டிரெய்லரை பார்த்துக்கொண்டிருக்கிறார். சதுரங்க வேட்டை படத்தை மனோபாலா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யுடன் இணைந்து மனோபாலா நண்பன், துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர். தற்போது தளபதி விஜய், விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Old one..but nostalgia.. pic.twitter.com/go3uNvb5yh
— manobala (@manobalam) April 15, 2020