இந்த மாதிரி சமயத்துலதான் உண்மையான நண்பர்களை தெரிஞ்சுக்கலாம்! பெண் இயக்குனர் கற்ற பாடம்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா பிரச்சனையால் ஊரடஙிகு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டிலிருந்தே தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் மக்கள் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக உணவு பிரச்சனைகள்.

வெளியில் செல்ல முடியாத நிலையில், அரிசி, பருப்பு, காய்கறி, பால், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் சிரமம் உள்ளது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஃபரா கான் தனது ட்விட்டரில் ‘என் உண்மையான நண்பர்கள் யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். என்னுடைய புது பாய் ப்ரெண்ட் காய்கறி கடைக்காரர் பாபு ராம், ஹிரால் க்ராஸரி ஸ்டோர்ஸ் ஸ்வப்நில், நோபல் கெமிஸ்ட் வைத்திருக்கும் பவன் மற்றும் பெக்ஸா ஃபிஷ் கடையிலிருந்து நளினி. இவர்களுக்கு என் நன்றி’’ என்று ட்வீட்டியிருந்தார்.
இதுபோன்ற காலகட்டத்தில் கைகொடுப்பவர்கள் இவர்களே என்பதுதான் நிஜம்.
Pandemic Teachings 2:-learning who my real friends are.. my new Bff’s-BabuRam vegetable wala.. Swapnil from hiralGroceryStores .. Noble Chemist ka Pawan.. n pescaFish ki Nalini.. 😄 thank you 🙏🏻
— Farah Khan (@TheFarahKhan) April 14, 2020