இப்போ 'தளபதி' ரீமேக் பண்ணா யார் நடிக்கலாம் ? - மம்மூட்டி மரண கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள திரையுலகில் தனது யதார்த்த நடிப்பால் மெகா ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் மம்மூட்டி. இவர் மலையாளம் தாண்டி தமிழிலும் 'தளபதி', 'அழகன்', 'ஆனந்தம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களின் மூலம் புகழ்பெற்றவராக திகழ்கிறார்.

Mammootty shares his memories Thalapathy and his latest movie Madhura Raja

இவர் தற்போது 'மதுரராஜா' என்ற படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் டிரெய்லரில் மம்முட்டி, 'தெரியும்ல இந்த ராஜா சொல்றததான் செய்வான். செய்யுறதா தான் சொல்வான்' என்ற தமிழ் டயலாக் பேசி அசத்தியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து Behindwoods TVக்கு பேட்டியளித்த மம்மூட்டி, தமிழ்சினிமா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது 'தளபதி' ரீமேக்கில் இப்போ யார் நடிச்சா நல்லா இருக்கும் என்று தொகுப்பாளர் அக்னி கேட்டார். அதற்கு பதிலளித்த மம்முட்டி, ஏன் சார் இப்படிலாம் கேட்கறீங்க ? யாரு நடிச்சா என்ன? யாரு நடிச்சாலும் அவங்கள மாதிரி தான் இருக்கும். 

'தளபதி' படத்துல சூர்யா, தேவா கேரக்டர நாங்க ரெண்டு பேரும் பண்ணலனு சொன்னா, வேற யாராவது நடிச்சிருப்பாங்க. அதனால ரீமேக் பண்ணட்டுமே. அதுல ஒன்னும் தப்பு இல்ல. யாரு டைரக்டரோ அவங்களுக்கு பிடிச்ச ஆக்டர் நடிக்கட்டும் என்றார்.

இப்போ 'தளபதி' ரீமேக் பண்ணா யார் நடிக்கலாம் ? - மம்மூட்டி மரண கலாய் வீடியோ