விஜய்யை கட்டித் தழுவிய ரசிகர்கள்- வைரலாகும் தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை அவரது ரசிகர்கள் கட்டிப்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fans hugging Vijay in Thalapathy 63 shooting spot video goes viral

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்களில் தளபதி விஜய்யை காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

ரசிகர்களை பார்த்து அவ்வப்போது கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த விஜய்யை அவரது ரசிகர்கள் ஓடி வந்து கட்டிப்பிடித்தனர். விஜய்யின் அருகே பவுன்சர்கள் இருந்தும் ரசிகர்கள் ஓடி வந்து விஜய்யை கட்டித் தழுவினர்.

ரசிகர்களை பவுன்சர்கள் தடுக்க முயன்றபோது, பரவாயில்லை என அவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யை கட்டித் தழுவிய ரசிகர்கள்- வைரலாகும் தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வீடியோ