சொல்றது தான் செய்வான், செய்றது மட்டும் தான் சொல்வான் - ரஜினி ஸ்டைலில் இந்த சூப்பர் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘மதுரராஜா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Mammootty's Madhuraraja trailer has been released now

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான ‘பேரன்பு’ திரைப்படத்தை தொடர்ந்து ‘புலிமுருகன்’ திரைப்படம் இயக்குநர் வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள ‘மதுரராஜா’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் ஸ்டைலில் ‘சொல்றது தான் செய்வான், செய்றது மட்டும் தான் சொல்வான்’ என்ற வசனத்தை தமிழில் வசனம் பேசி மம்மூட்டி நடித்துள்ளார்.

ஏற்கனவே மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘போக்கிரிராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் மதுரையை களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஜெய், நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெகபதி பாபு, பாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்

சாஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மலையாள திரையுலகில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் மலையாள புத்தாண்டான விஷூ பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.

சொல்றது தான் செய்வான், செய்றது மட்டும் தான் சொல்வான் - ரஜினி ஸ்டைலில் இந்த சூப்பர் ஸ்டார் வீடியோ