விஜய்யின் மாஸ்டர் ட்ரெய்லர் அப்டேட்.! 'வரும்.. ஆனா..' இணையத்தை அதிரவிடும் மாஸ்டர் நடிகர்.
முகப்பு > சினிமா செய்திகள்விஜய்யின் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் குறித்து படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் மாஸ்டர் டீசர் எப்போது வெளியாகும் என கேட்டதற்கு, ''உங்களை போல நானும் வெயிட்டிங் தான். டீசர் அல்லது ட்ரெய்லர் வந்தா நல்லா இருக்கும். கவலைப்படாதீங்க, ஏப்ரல் 14-க்குள் ஒரு நல்ல அப்டேட் வரும் என பதிலளித்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதிக்க, 'எப்பா ராசா, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, அதான் ஒரு கணக்குல நானா சொன்னேன், ஒரு ரசிகனா நானும் உங்களை மாதிரி வெயிட் பண்ணிட்டு தான் இருக்கேன், மத்தபடி எனக்கு ஒன்னுமே தெரியாது'' என அவர் பதிவிட்டுள்ளார். எப்படியோ 14-ஆம் தேதிக்குள் நல்ல அப்டேட் வந்தால் சந்தோஷம் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Yappa rasa April 14th "தமிழ் புத்தாண்டு" la andha oru kanakula naana sonna oru rasigana naanum unghala mari dhan pa wait pannitu irrukan ennaku onnumae theriyadhu 🙄🙄😷😷 https://t.co/IQwnODMfeV
— Master Mahendran 🌟 (@Actor_Mahendran) April 6, 2020