www.garudabazaar.com

சமந்தா - நாக சைதன்யா சேர வாய்ப்பில்லை... போஸ்டை நீக்க இதான் காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்திருந்ததை சமூகவலைதள பக்கத்தில்  நீக்கியிருப்பது அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

actress Samantha deleted the divorce post on Instagram

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இதனிடையே திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்த சமந்தாவிடம் நீங்கள் விவகாரத்து செய்ய போகீறிர்களா என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு கோபமடைந்தார் சமந்தா.

 actress Samantha deleted the divorce post on Instagram

இந்நிலையில்,  திடீரென சமந்தாவும் நாக சைதன்யாவும் 'நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நாங்கள் இருவரும் பிரிகிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.  அது எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்' என குறிப்பிட்டு ஒரே நேரத்தில் தங்களது விவாகரத்து முடிவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர்.

 actress Samantha deleted the divorce post on Instagram

இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த அந்த பதிவை நீக்கி இருக்கிறார் சமந்தா.

 actress Samantha deleted the divorce post on Instagram

இதனைதொடர்ந்து  அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யா அறிவித்த அறிவிப்பு இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. சமீபத்தில்  நாக சைதன்யா அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார்.  'பிரிவு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர் விரும்பும் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும்' என்று கூறினார்.

இந்நிலையில்,   Switzerland-க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு பனிச்சறுக்கு செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் சமந்தா தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் பற்றிய பதிவுகளை இன்ஸ்டாவில் இருந்து நீக்கி வருகிறார். அதனால் தான் இந்த போஸ்ட்டையும் நீக்கிவிட்டார் என கூறப்படுகிறது. எனவே சமந்தா - நாக சைதன்யா இருவரும் மீண்டும் சேர வாய்ப்பு இல்லையாம்.

 actress Samantha deleted the divorce post on Instagram

தொடர்புடைய இணைப்புகள்

actress Samantha deleted the divorce post on Instagram

People looking for online information on Actress Samantha, Instagram, Nagachaitanya, Samantha, Samantha post, Samantha viral video, Social Media, Twitter will find this news story useful.