பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உடல்  நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79. முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி உள்ளிட்ட உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.

Veteran Director and Actor Mahendran passes away

திரைப்பட எழுத்தாளராக தனது கலையுலக வாழ்வைத் தொடங்கிய மகேந்திரன், எம்ஜிஆரால் திரையுலகுக்கு அழைத்து வரப்பட்டவர். கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக்க விரும்பிய எம்ஜிஆர் அதற்கு இவரைத் தான் திரைக்கதை எழுதச் சொல்லியிருக்கிறார்.  சிவாஜியின் தங்கப்பதக்கம் உள்ளிட்ட ஏராளமான புகழ் பெற்ற படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

பின்னர் தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன், தொடர்ந்து நிமிர், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் நடிகராகவும் மக்கள் மனதை வென்றுள்ளார்.

இந்நிலையில் மறைந்த அவரது உடலுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.