தளபதி 'மாஸ்டர்' குறித்து பிரபல நடிகர் அதிரடி - ''என்ட்ரி சீன்ல தளபதி ஒரு மேஜிக் பண்ணாரு...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

தளபதி விஜய், விஜய் சேதுபதி குறித்து மாஸ்டர் நடிகர் மகேந்திரன் பேட்டி | Actor Mahendran speaks about Thalapathy Vijay and Vijay Sethu

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்நந்து படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த மகேந்திரன் தனது அனுபவம் குறித்து Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தளபதி விஜய் குறித்து பேசிய அவர், ஃபைட் சீன் நடக்கும் போது நான் அங்க போனேன். ஒளிப்பதிவாளர் சத்யா அண்ணன் செமயா ஆங்கிள் வச்சாரு.

அப்போ விஜய் சாரோட என்ட்ரி இருக்கும். சில்வா மாஸ்டர் எதுவுமே சொல்லல. அங்க தளபதி ஒரு மேஜிக் பண்ணாரு.  செட்டே வாவ்னு சொன்னாங்க. விஜய் அண்ணா பண்ண சர்ப்ரைஸ்'' என்றார்.

விஜய் சேதுபதி குறித்து பேசும்போது, ''அவர பார்த்தா கொரோனாவே பயந்து ஓடிடும். அவர் கிட்ட அவ்ளோ எனர்ஜி இருக்கும். அவர பார்த்தா, நாங்கலாம் ரொம்ப நாளா பண்ணனும்னு நினைக்குற விஷயத்தை செலக்ட் பண்ணி இவ்ளோ வருஷம் பண்ண முடியுது'' என்றார்.

தளபதி 'மாஸ்டர்' குறித்து பிரபல நடிகர் அதிரடி - ''என்ட்ரி சீன்ல தளபதி ஒரு மேஜிக் பண்ணாரு...'' வீடியோ

Entertainment sub editor