அஜித்தின் இந்த சிரிப்பு காரணம்..! மாஸ்டர் நடிகர் மகேந்திரன் பகிர்ந்த ஃப்ளாஷ்பேக் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் படத்தின் க்ளாசிக் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

அஜித் வீடியோவை பகிர்ந்த மாஸ்டர் மகேந்திரன் | vijay's master actor mahendran shares a video of ajith film.

தனது சிறுவயதில் பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் மாஸ்டர் மகேந்திரன். அஜித்,விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இவர் கலக்கினார். இதையடுத்து இவர் கதாநாயகனாக நடித்து விழா என்கிற படம் வெளியானது. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் அஜித் நடித்த முகவரி படத்தில் இவர் தோன்றும் காட்சியை அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சீன் தன்னம்பிக்கைக்கானது என அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் க்ளாசிக் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் இந்த காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Master Mahendran 🌟 (@mahendranactorofficial) on

Entertainment sub editor