''தளபதி கூட இது என்னோட Favorite சீன்'' - 'மாஸ்டர்' நடிகர் அதிரடி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 11, 2020 09:48 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனன் நடிக்க, சாந்தனு, ஆண்டரியா, அர்ஜூன் தாஸ், மகேந்திரன், ஸ்ரீமன், கௌரி கிஷன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மின்சாராக் கண்ணா படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த காட்சியை பகிர்ந்து அது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தளபதி கூட இது என்னோட ஃபேவரைட் சீன் என்று பதிலளித்தார்.
Fav scene with #Thalapathy ❤️🤩 https://t.co/RMGUDdQkhk
— மஹி🌟 (@Actor_Mahendran) January 11, 2020