விஷ்ணு விஷாலின் FIR படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 10, 2019 08:04 PM
விஷ்ணு விஷால் நடித்து வரும் 'எஃப்ஐஆர்' பட பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த படத்தை சுஜாதா எண்டர்டெயின்மென்ட் சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிக்க, மனு ஆனந்த் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றர். இந்த படத்துக்கு அஸ்வத் இசையமைக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் அடுத்த வருடம் சம்மரில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் 'தூங்காநகரம்', 'சிகரம் தொடு', 'இப்படை வெல்லும்' படங்களின் இயக்குநர் கௌரவ் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.
Tags : FIR, Vishnu Vishal, Raiza