அடேங்கப்பா... நடிகர் கமல் கிட்டயே அந்த வார்த்தை வாங்கிட்டாரு... வைரலான இளைஞருக்கு பாராட்டு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாக உயர்ந்து நிற்பவர் உலகநாயகன் கமல். இவரது பல படைப்புகள்  காலம் கடந்து பேசும் வல்லமை உடையவை எனபதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் அவரது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வரும் 'அண்ணாத்த' ஆடுறார் பாடலுக்கு இளைஞர் ஒருவர் டிரெட்மில் மீது டான்ஸ் ஆடும் வீடியோ சமீபத்தில் மிகவும் வைரலானது.

வைரலான டான்ஸ் வீடியோ கமல் பாராட்டு Actor kamalhassan appreciates youngster dance video

அந்த வீடியோவை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தற்போது அந்த இளைஞரை பாராட்டி எழுதியுள்ளார். அதில்  அவர் "நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வைரலான டான்ஸ் வீடியோ கமல் பாராட்டு Actor kamalhassan appreciates youngster dance video

People looking for online information on Dance, Kamalhassan will find this news story useful.