கமல் பட பாடலுக்கு, ட்ரெட்மில் மீது டான்ஸ் ஆடிய ரசிகர்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் பட பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

கமல் பாடலுக்கு ட்ரெட்மில்லில் டான்ஸ் ஆடிய ரசிகர் | kamal's fan dance video over treadmill goes viral

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் கமல் ஹாசன். இவர் நடித்த பல திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்ப்போது அரசியலில் ஆர்வம் காட்டி வரும் இவர், இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். 

இந்நிலையில் நடிகர் கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு ரசிகர் ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. கமலின் தீவிர ரசிகரான இவர், தொடர்ந்து அவரது படத்தின் காட்சிகளையும் பாடல்களையும் டிக்டாக் வீடியோ செய்து வந்தார். தற்போது இப்பாடலுக்கு, உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில் மீது நடனமாடியபடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த வீடியோ ரசிகர்களின் லைக்ஸை குவிப்பதோடு, இணையத்தில் வைரல் ஹிட் அடுத்து வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கமல் பாடலுக்கு ட்ரெட்மில்லில் டான்ஸ் ஆடிய ரசிகர் | kamal's fan dance video over treadmill goes viral

People looking for online information on Kamal Fan, Kamal Haasan, Tiktok Video will find this news story useful.