மாஸ்டர் ஷோபி தன் மனைவியுடன் செம க்யூட் டான்ஸ்.!! - ரெண்டு பேருக்கும் செம கெமிஸ்ட்ரி பாருங்க.
முகப்பு > சினிமா செய்திகள்நடன இயக்குநர் ஷோபி தனது மனைவியுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வலம் வருபவர் ஷோபி பால்ராஜ். இவர் விஜய் நடித்த கத்தி, சர்க்கார், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரது மனைவி லலிதாவும் இவருடன் சேர்ந்து நடன இயக்குநராக படங்களில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் ஷோபி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நடன கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்ற விழா ஒன்றில், இருவரும் மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் செம கெமிஸ்ட்ரியுடன் ஆடும் இந்த டான்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. இதுமட்டுமின்றி ராபர்ட் மாஸ்டருடன், விஜய்யின் லவ் டுடே பாடலுக்கு ஆடிய வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
😍🕺🕺👍 Lovely memories 😍 After 22 years Danced for same song #EnnaAzhagu #என்னஅழகு #லவ்டுடே #LoveToday @actorvijay sir 😍👍
with My Dear Brother Robert #Robert #RobertMaster #shobimaster #TANTTNNIS #gettogethercelebration #90sDancersBatch 😍🙏 God Bless pic.twitter.com/yjcCM8K7Y7
— Shobi Paulraj (@shobimaster) June 1, 2020