உச்சகட்ட மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் பிரபல ஹீரோயின் - அப்படி என்னாச்சு ?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானவர் ஜெனிலியா. அதனைத் தொடர்ந்து 'சச்சின்', 'சந்தோஷ் சுப்ரமணியம்' போன்ற படங்களில் துறுதுறு பெண்ணாக கியூட்டான அவரது நடிப்பை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

Popular heroine shares dance video, which went viral ft Genelia | பிரபல ஹீரோயின் உச்சகட்ட மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் வீடியோ வை

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா இருவரும் இணைந்து இணைந்து துஜே மேரி கசம் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தனர். இருவருக்கும் அது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஜெனிலியா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ''எப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அப்போதெல்லாம் டான்ஸ்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த  வீடியோவிற்கு சுஜா வருணி உள்ளிட்டோர் நன்றாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When happy ... Dance !!!

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

Popular heroine shares dance video, which went viral ft Genelia | பிரபல ஹீரோயின் உச்சகட்ட மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் வீடியோ வை

People looking for online information on Genelia D Souza, Instagram will find this news story useful.