'இந்த போட்டோ மட்டும் இல்லைன்னா...' - 13 வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கலையரசன் தனது பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் குணசித்திர வேடங்களிலும் கலக்கி வருபவர் கலையரசன். மதயாணைக்கூட்டம், முகமூடி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து அதே கண்கள், டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ரஜினியின் கபாலி படத்திலும் இவர் கலக்கினார்.
இந்நிலையில் கலையரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். 2007-ஆம் ஆண்டு எடுத்த அவரது போட்டோவை அவர் பகிர, அந்த போட்டோவை எடுத்த அவரது நண்பர் கிரண், 'இந்த போட்டோ மட்டும் இல்லைன்னா, இன்னைக்கு உங்களுக்கு வாழ்க்கையே இல்லை, மிஸ்டர். கலை. நியாபகம் வச்சிக்கோங்க' என அவர் கிண்டலாக பதிவிட்டார். அதற்கு கலையரசன், 'இந்த போட்டோவைதான் நான் ஆடிஷன் போகும் போது முதல் போட்டோவாக வைப்பேன்'' என தன் ஃப்ளாஷ்பேக் நினைவுகளை ரிப்ளையாக அடித்துள்ளார். கலையரசன் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.