Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

இளம் நடிகரின் இயக்கத்தில்.. பரத் நடித்த புதிய படம்.. பிரபல டிவியில் ஒளிபரப்பாக போகுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 10 பிப்ரவரி 2022:- நடிகர் பரத் நடித்து வெளியாகியிருந்த ஒரு புதிய திரைப்படத்தை உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்பவுள்ள தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

actor bharath new movie first time Premiere in Popular TV

நடுவன் - திரைப்படம்

பிரபல பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘நடுவன்’ திரைப்படத்தை உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ளது. காதல், பயம், துரோகம் மற்றும் பழிவாங்கல் என பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிக்காட்டும் கதைத்தளம் கொண்ட இந்த திரைப்படம் அதிரடி நிகழ்வுகளும், சண்டைக் காட்சிகளும் நிறைந்த த்ரில்லர் படம்.

Also Read: ஜெயம் ரவியா இது? முதல் முறை Salt & pepper லுக்கில் தீயாய் பரவும் ஃபோட்டோ.. அடுத்த படத்துல இதுதான் கெட்டப்பா?

நடிகர் ஷரன் குமாரின் இயக்கத்தில்

இயக்குனராக நடிகர் ஷரன் குமாரின் முதல் திரைப்படமாக நடுவன் படம் வெளிவந்திருக்கிறது. நடிகர் பரத் மற்றும் நடிகை அபர்ணா வினோத் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் கோகுல் ஆனந்த் மற்றும் அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

actor bharath new movie first time streaming in Popular TV

நடுவன் - என்ன கதை?

கொடைக்கானலில் ஒரு தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளரான கார்த்திக் என்ற இளைஞனை (நடிகர் பரத்தின் நடிப்பில்) முன்னிறுத்தி கதை நகர்கிறது.  தனது மனைவி மது (அபர்ணா வினோத்தின் நடிப்பில்) மீது அக்கறை செலுத்த மற்றும் நேரம் செலவிடுவதற்கு பதிலாக தனது பணிக்கே அதிக முன்னுரிமையை கார்த்திக் வழங்குவதால் திருமண வாழ்க்கையில் பல நேரங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார் மது.

பின்னர், தேயிலை தொழிலகத்தில் புதிதாக பணிக்கு சேரும் குரு (அருவி பாலாவின் நடிப்பில்), கார்த்திக்கிற்காக ஒரு பணியை செய்கின்ற போது, மது (அபர்ணா வினோத்தின் நடிப்பில்) சிவா என்ற நபரோடு (கோகுல் ஆனந்தின் நடிப்பில்) பழகுவதை கண்டறிகிறார்.  இவர்கள் மூவருக்கு இடையே ஏற்படும் உறவு கதையை எப்படி திருப்பிகிறது, பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இக்கதை எதைநோக்கி செல்கிறது என்பது சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது.

 

நிச்சயம் விருந்தாக அமையும்

உலக தொலைக்காட்சி ப்ரீமியர் நிகழ்வாக வெளிவரும் இத்திரைப்படம் ஒளிபரப்பாவது குறித்துப் பேசிய நடிகர் பரத், “கலர்ஸ் தமிழ் போன்ற மக்கள் மனம் கவர்ந்த பிரபல சேனலில் ‘நடுவன்’ வெளியாவது அதிக உற்சாகமளிக்கிறது.  ஆர்வத்தை பன்மடங்காக உயர்த்தும் வகையில், ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் என்ற இரு பிரிவுகளின் கலவையாக இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  திரைப்படத்தின் மையக்கருவாக காதலும், அன்பும் இருக்கின்றபோது, பரபரப்பும், அதிரடி காட்சிகளும் விறுவிறுப்பைக் கூட்டுகின்ற திரைப்படமாக இது இருப்பதால், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு இது நிச்சயம் விருந்தாக அமையும்,” என்று கூறினார்.

நிச்சயமாக ரசிப்பார்கள்

நடிகராக அறிமுகமாகி இயக்குனராக உருவெடுத்திருக்கும் ஷரன் குமார் பேசுகையில், “இத்திரைப்படத்திற்காக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் காலம் நான் பணியாற்றியிருக்கிறேன்.  ஒரு இயக்குனராக திரையுலகில் நான் அறிமுகமாக வழி வகுத்திருக்கும் நடுவன் திரைப்படம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக எப்போதும் இருக்கும்.  எனது கனவு செயல்திட்டமான இதை திரைப்பட ரசிகர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.” என்று கூறினார்.

இந்த திரைப்படத்தை பிப்ரவரி 13, ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.

Also Read: வேட்டை ஆரம்பம்.. சரத்குமார் நடிக்கும் ‘இரை’ வெப் சீரிஸ்.. ரிலீஸ் தேதி & டீசர் அப்டேட் கொடுத்த தாப்சி, ஜெயம் ரவி!

actor bharath new movie first time Premiere in Popular TV

People looking for online information on Bharath, Naduvan will find this news story useful.