Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

போலீஸ் திருடன் விளையாட்டு.. அனிதா கையில் ஏற்பட்ட காயம்.. வனிதாவிடம் வாங்கிக்கட்டிய அபினய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபினய் இன்று வனிதாவிடம் நல்லபடியா வாங்கி கட்டி கொண்டார்.

Vanitha - Abhinay Argument In Big Boss Ultimate Home

பிக்பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சி ஆரம்பித்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் ஐந்து சீசன்களில் பங்கேற்றவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் சண்டை சர்ச்சரவு என நகர்ந்து வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இதுவரை 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி இருக்கிறார்.

திருடன் போலீஸ் டாஸ்க்

பிக்பாஸ் வீட்டில் பல கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு டாஸ்க்கை கூட ஹவுஸ்மேட்ஸ் ஜாலியாக டாஸ்க் மோடில் செய்து முடிப்பதில்லை. கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் வீட்டில் திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. டாஸ்க் தொடங்குவதற்கு முன்பே, இது போலீஸ் உடை. கவனமாக, கண்ணியமாக கையாள வேண்டும் என பிக்பாஸ் எச்சரித்தார்.  பிக்பாஸ் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் நடந்து கொண்டது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.  சுருதி , கருப்புக்கலர் பேண்ட் போட்டு மேலே மட்டும் யூனிஃபார்ம் சட்டை போட்டிருந்தார். ஷாரிக், சர்ட் பட்டன் போடவில்லை. பாலாஜி தொப்பியை தூக்கிக்கொண்டு தலையில் வைக்காமல் இருந்தார்.

Vanitha - Abhinay Argument In Big Boss Ultimate Home

அனிதா கையில் காயம்

இந்நிலையில், தற்போது வனிதா அபினயை கடுமையாக பேசும் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாதி டாஸ்க்கில் போலீஸாக இருந்தவர்கள் இரண்டாவது பாதியில் திருடர்களாகவும், முதல் பாதியில் திருடர்களாக இருந்தவர்கள் இரண்டாவது பாதியில் போலீஸாகவும் உள்ளனர். மூன்றாம் நாளான இன்றும் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் அனிதாவின் கையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனிதா உட்பட சக ஹவுஸ்மேட்ஸ் அனிதாவுக்கு முதலுதவி அளிக்கின்றனர்.

வனிதா - அபிநய் கடும் சண்டை

அப்போது வனிதா ஆவேசத்துடன் "இந்த கேமை நிறுத்துங்கள் பிக்பாஸ் , எங்கள் டீமுக்கு பாய்ண்ட்ஸ் தேவை இல்லை" என்கிறார். அப்போது அங்கு வரும் அபினய், "இங்கும் நிறுத்த சொல்லியாச்சு" அங்கும் நிறுத்த சொல்லியாச்சு என கூற, நான் கேமையே நிறுத்த சொல்கிறேன் என்கிறார் வனிதா. இதனைக் கேட்ட அபினய், "யாரும் கேம் ஆடவில்லை, சண்டைதான் போடுகிறீர்கள்" என்று கூறுகிறார். இதனால் கடுப்பாகும் வனிதா, "அபினய் கோல்மால் செய்கிறாய்" என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

Vanitha - Abhinay Argument In Big Boss Ultimate Home

ஸ்ருதிக்கு அட்வைஸ்

அப்போது கற்றுக்கொள் என்று வனிதா கூற "நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எனக்கு சொல்லி தர வேண்டாம் என சண்டை போடும் தொனியிலேயே பேசுகிறார் அபினய். அந்த நேரத்திலும் ஸ்ருதி காரியத்திலேயே கண்ணாயிருக்க, ஒருவர் அடிப்பட்டுருக்கு இந்த நேரத்தில் இது தேவையா மனிதாபிமானத்துடன் விளையாடுங்கள் என சினேகன் விளாசுகிறார். திருடன் போலீஸ் டாஸ்க்கால் பிக்பாஸ் வீடு ரத்தக்களறி ஆகியுள்ளது.

Vanitha - Abhinay Argument In Big Boss Ultimate Home

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha - Abhinay Argument In Big Boss Ultimate Home

People looking for online information on Abhinay, Anitha, BBT, Big Boss Ultimate, Hotstar, New Promo video, Police Task, Snekan, Sruthi, Thamarai, Vanitha will find this news story useful.