www.garudabazaar.com

அனுபமா பரமேஸ்வரன் போல ரசிகர்களுக்கு திடீர் இன்பதிர்ச்சி கொடுத்த திவ்யபாரதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் போல நடிகை திவ்ய பாரதியும் நிறைமாத கர்ப்பினி வேடத்துடன் எடுத்த புகைப்படததை வெளியிட்டுள்ளார். 

Actress Divya bharathi pregnant photo like Anupama Parameshwaran

BREAKING: ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்குகிறாரா பிரபல பெண் இயக்குனர்? முழு தகவல்

ஒரிரு நாட்களுக்கு முன் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள்  மணியறையிலே அசோகன் என்ற மலையாள படத்தில் நடித்தபோது எடுத்த BTS புகைப்படம் என்றும் அனுபமா இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார். இந்த புகைப்படங்கள் படு வைரலாக அமைந்தன.

இந்நிலையில் அனுபமா போல நடிகை திவ்யபாரதியும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் பேச்சுலர் படத்தில் கர்ப்பினியாக நடித்த போது எடுத்த BTS படங்கள் என்றும், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான பாத்திரம் என்றும் கூறியுள்ளார். 

Actress Divya bharathi pregnant photo like Anupama Parameshwaran

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வந்த திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் தான் திவ்யபாரதி. இவர் தமிழ் நாட்டின் கோயம்புத்தூரைச் சார்ந்தவர்.

Actress Divya bharathi pregnant photo like Anupama Parameshwaran

தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

Actress Divya bharathi pregnant photo like Anupama Parameshwaran

மதில் மேல் காதல் படத்தை அஞ்சனா அலிகான் எழுதி இயக்குகிறார். Shirdi Productions இப்படத்தை தயாரிக்கிறது. K. சிவசங்கர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), அந்தோணி (எடிட்டர்), நிவாஸ் K பிரசன்னா (இசை), கல்யாண் மாஸ்டர் (நடன அமைப்பு), சுரேஷ் கல்லேரி (கலை), முக்தி சுவாமிநாதன்-சேத்தனா கவுட் (ஸ்டைலிஸ்ட்), ஆரத்தி ஆபிரகாம் ( பப்ளிசிட்டி டிசைன்ஸ்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

Actress Divya bharathi pregnant photo like Anupama Parameshwaran

மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் & டீசர் எப்போ? கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

தொடர்புடைய இணைப்புகள்

Actress Divya bharathi pregnant photo like Anupama Parameshwaran

People looking for online information on Anupama Parameshwaran, அனுபமா பரமேஸ்வரன், திவ்ய பாரதி, Divya Bharathi, Divya Bharathi Photo will find this news story useful.