Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

ஜெயம் ரவியா இது? முதல் முறை Salt & pepper லுக்கில்.. #JR28 படத்தில் இதுதான் Jayam Ravi கெட்டப்பா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 09, பிப்ரவரி 2022:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக  திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

Jayam Ravi new viral salt and pepper look is this JR28 get up

ஜெயம் ரவி

பிரபல திரைப்பட எடிட்டர் மோகனின் மகனும், பிரபல இயக்குனர் மோகன் ராஜாவின் தம்பியுமான ஜெயம் ரவி, 2003ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமாகி ரசிகர்களை கவனிக்க வைத்தார். முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான ஜெயம் ரவிக்கு, அடுத்தடுத்து வெளிவந்த, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் - உனக்கும் எனக்கும், தீபாவளி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்கள் ஹிட் கொடுத்தனர்.

Also Read: என்னா ஸ்டைலு.. "பேசுனாவே பாடுற மாரி".. மிஸ் யூ சில்க்.. வெறித்தனமான Dance.. வைரல் Throwback வீடியோ

தனி ஒருவன், பூமி

குறிப்பாக தமது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்திலான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு மற்றுமொரு மாபெரும் ஹிட் படமாக அமைந்தது மட்டுமின்றி மிகப்பெரிய அளவில் வெற்றியும் அடைந்தது. கடைசியாக ஜெயம் ரவி நடித்து டிஸ்னி+ஹாட் ஸ்டாரி நேரடியாக வெளிவந்த படம் பூமி. விவசாயிகளின் பிரச்சனையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது.

பொன்னியின் செல்வன்

தற்போது அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த புனைவு சரித்திர படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் ஜெயம் ரவி முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை இளவரசே அன அழைத்து, இந்த படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி் பதிவிட்ட ட்வீட்களும் அதற்கு ஜெயம் ரவியின் பதில் ட்வீட்களும் இடையில் இணைய உலகில் மிகவும் பிரபலம் ஆகின. அத்துடன் அவர்களின் கதாபாத்திரங்களை புரியவைத்தன.

ஜெயம் ரவி நடிக்கும் 28வது படம்

இதனைத் தொடர்ந்து ‘பூலோகம்’ பட இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 28வது படமான இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடிக்க, இந்த படத்தை ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி பகுதிகளில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் புதிய கெட்டப்

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்துக்கு அகிலன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அண்மையில் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்திருப்பதாக நாம் கூறியிருந்தோம்.  இதனிடையே ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாக்கப்படுவதாக கூறப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி என்ன கெட்டப்பில் தோன்றவிருக்கிறார் என்கிற புதிய பேச்சு, அவருடைய சமீபத்திய வைரல் ஃபோட்டோவை பார்த்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வைரலாகும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்

ஆம், ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படவைக்கும் ஜெயம் ரவியின் இந்த புதிய ஃபோட்டோவில் அவர் நரை தாடி, தலைமுடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்மார்ட்டாக இருக்கிறார். இயல்பான சூழ்நிலையில் எதார்த்தமான தருணத்தில் எடுக்கப்பட்ட இந்த ஃபோட்டோ ஜெயம் ரவியின் 28வது படத்துக்கான ஃபோட்டோவா? என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

மேற்படி இந்த ஃபோட்டோ பிரபல தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்லத்திருமண விழாவுக்காக ஜெயம் ரவிக்கு பத்திரிகை அழைப்பு வைத்தபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “BiggBoss மூலம்  ஸ்டாரெல்லாம் ஆக முடியாது.. அழுகாட்சி ஹீரோயினாவே நடிக்க  வெச்சுட்டாங்க” - நடிகை ரேகா பரபரப்பு பேச்சு

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi new viral salt and pepper look is this JR28 get up

People looking for online information on Jayam Ravi, JayamRavi28, JR28, N.Kalyanakrishnan will find this news story useful.