www.garudabazaar.com

BIRTHDAY நைட் பார்ட்டியில் Bachelor திவ்ய பாரதி.. வைரலான பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை திவ்யபாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட பார்ட்டி வீடியோ வைரலாகிறது.

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி. நடிகை திவ்ய பாரதி நேற்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், "உண்மையான மகிழ்ச்சி, உங்களால் என் சிரிப்பை நிறுத்த முடியாத உணர்வு. எனது பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக மாற்றியமைக்கு அனைவருக்கும் நன்றி. நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

 

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நண்பர்கள் தான் குடும்பம் எனவும் கேப்சன் போட்டுள்ளார் நடிகை திவ்ய பாரதி. தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். 

'கடவுள் என் ப்ரா சைஸை அளவிடுகிறார்' என சர்ச்சை பேச்சு.. BIGGBOSS நடிகை வெளியிட்ட பரபர அறிக்கை

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

மதில் மேல் காதல் படத்தை அஞ்சனா அலிகான் எழுதி இயக்குகிறார். Shirdi Productions இப்படத்தை தயாரிக்கிறது. K. சிவசங்கர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), அந்தோணி (எடிட்டர்), நிவாஸ் K பிரசன்னா (இசை), கல்யாண் மாஸ்டர் (நடன அமைப்பு), சுரேஷ் கல்லேரி (கலை), முக்தி சுவாமிநாதன்-சேத்தனா கவுட் (ஸ்டைலிஸ்ட்), ஆரத்தி ஆபிரகாம் ( பப்ளிசிட்டி டிசைன்ஸ்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

விஷால் - டிம்பிள் ஹயாதி நடிக்கும் புதிய படம்! வெளியான புதிய ரிலீஸ் தேதி! செம அப்டேட்!

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

 

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

 

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

தொடர்புடைய இணைப்புகள்

Actress Divya Bharathi Birthday Night Party Video Went Viral

People looking for online information on திவ்யபாரதி, Bachelor, Divya Bharathi, Divya Bharathi Birthday Night Party will find this news story useful.