'கப்பு முக்கியம் பிகிலு...' - தினேஷ் கார்த்திக்கிற்கு பிரபல தமிழ் நடிகர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வங்கதேச கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி,  2க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனையடுத்து வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.

Actor Arjunan Comments Bigil Dialogue to Cricketer Dinesh Karthik

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக்கை குறிப்பிட்டு, தினேஷ் கார்த்திக் தான் FC, லிஸ்ட் A, டி20 என மூன்று வகை போட்டிகளிலும் ஹிட் விக்கெட்டில் அவுட் ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அதிர்ச்சியாகும் எமோஜியை தினேஷ் கார்த்திக் பதிலாக அளித்தார். இந்நிலையில் காதலில் சொதப்புவது எப்படி,  வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜூனன் கப்பு முக்கியம் பிகிலு... என்று கமெண்ட் செய்துள்ளார்.