''நேத்து பிகில் படம் பார்த்தேன்...'' - விஜய்யின் 'பிகில்' படம் குறித்து அருண் விஜய் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Arun Vijay comments about Thalapathy Vijay and Atlee's Bigil

அதன் ஒரு பகுதியாக நடிகர் அருண் விஜய் பிகில் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், அதில் நேற்று பிகில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சார் செமயா பண்ணியிருக்காரு. எல்லா உணர்வுகளும் கலந்த பொழுதுபோக்கு திரைப்படம். குடும்பத்துடன் பார்க்கும் போது என்ஜாய் பண்ண முடிந்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள பிகில் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.