உலக அளவில் தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தின் வசூல் இவ்வளவா ? - சிங்கப்பெண் ட்வீட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 11, 2019 01:03 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பலமாக இருந்தது. ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிங்கப்பெண்களாக வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, அம்ரிதா உள்ளிட்டோர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா பிகில் படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் ராயப்பன் லுக்கில் விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், 'பிகில்' உலக அளவில் 300 கோடி வசூலித்துள்ளதாக ஹேஷ்டேக் பகிர்ந்துள்ளார்.
VERITHANAM 🔥 pic.twitter.com/xr8tTID3gA
— Varsha Bollamma (@VarshaBollamma) November 11, 2019