வடிவேலு ஸ்டைலில் 'சூப்பர் டீலக்ஸ்' அஸ்வந்த்துடன் டப் மாஸ் செய்யும் 'பிகில்' பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 12, 2019 06:45 PM
'அசுரன்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்த் தயாரித்து வருகிறார்.
லண்டனில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. இந்த படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கலையரசன், சூப்பர் டீலக்ஸ் அஸ்வந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலயில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது மாஸ்டர் அஸ்வந்த்துடன் இணைந்து சவுந்தரராஜா வடிவேலுவின் மூன தொட்டது யாரு என்ற காமெடியை டப் மாஸ் செய்துள்ளனர். சௌந்தர ராஜா சமீபத்தில் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருந்தார்.
#D40 திரைக்கு பின்னால் @soundar4uall அண்ணனுடன் 😆 #Superdeluxe #Rasukutty #Ashwanth pic.twitter.com/Wm00V3gEJ9
— Ashwanth Ashokkumar (@actorashwanth) November 12, 2019