''விஜய் போட்ருந்த ஜெர்சியை எனக்கு கிஃப்டா கொடுத்தாரு'' - 'பிகில்' பிரபலம் மகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம்  'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Soundara Raj tweets about Thalapathy Vijay's Gift in Bigil

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகர் சௌந்தர ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ''விஜய் அண்ணா அவர் அணிந்த ஜெர்ஸியை எனக்கு கிஃப்டா கொடுத்தாரு. எனக்கு அதன் மேல் உணர்வுப் பூர்வமான உறவு இருக்கு. மேலும் இது எனக்கு இந்த வருடத்தின் சிறந்த பரிசுகளில் ஒன்றாக இருக்கும் நன்றி விஜய்'' என்று குறிப்பிட்டுள்ளார்.