'பிகில்' சிங்கப்பெண்ணின் அடுத்த பட ஹீரோ இவரா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளியை முன்னிட்டு வெளியான தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

'Bigil' Actress Reba Monica John to act with Tovino Thomas in Forensic

இந்த படத்தில் ஃபுட் பால் விளையாட்டு சம்மந்தபட்ட காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக இந்த படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, பின்பு நம்பிக்கையுடன் எழுந்து வரும் சிங்கப் பெண்ணாக ரெபா மோனிகா ஜான் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இவர் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதில், ''டோவினோ தாமஸ் நடிக்கும் 'ஃபோரன்சிக்' எனும் படத்தில் நடிப்பது உச்சகட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் சிகா தாமோதர் எனும் Forensic science intern-ஆக நடிக்கிறேன். இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  அதற்கு பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.