www.garudabazaar.com

மத்திய அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு.. குஷ்புவை வாழ்த்தி மெகாஸ்டார் ட்வீட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்புவை வாழ்த்தி மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார்.

Chiranjeevi Wishes Kushboo for Member of NCW

Images are subject to © copyright to their respective owners.

Also Read | காதலருடன் கேரளாவில் பிக்பாஸ் நடிகை ஆயிஷா.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் PHOTOS!

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு . தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர்.

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

Chiranjeevi Wishes Kushboo for Member of NCW

Images are subject to © copyright to their respective owners.

2010 ஆம் ஆண்டு முதல் 2014-வரை திமுக கட்சியில் இருந்த குஷ்பு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, தற்போது பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆக வலம் வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு குஷ்பு தோல்வி அடைந்தார்.

நேற்று மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இதனை முன்னிட்டு நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், "இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக நரேந்திர மோடிஜிக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் எனது நன்றிகள். உங்கள் தலைமையின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் நாரி சக்தியைப் (பெண் சக்தி) பாதுகாக்கவும்,  மற்றும் வளர்க்கவும் கடுமையாகப் பாடுபடுவேன். இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜெய்ஹிந்த்" என குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

Chiranjeevi Wishes Kushboo for Member of NCW

Images are subject to © copyright to their respective owners.

இந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி நடிகர் சிரஞ்சீவி, "உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் குஷ்பு!

நீங்கள் நிச்சயமாக இந்த பதவிக்கு தகுதியானவர். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உங்கள் இருப்பை நம்புங்கள்.

பெண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும் அதிக கவனம் செலுத்தி, திறமையான தீர்வை உறுதி செய்யுங்கள்.  அவர்களின் குரலை மேலும் வலுப்படுத்துங்கள். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!" என சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் குஷ்புவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

Also Read | இணையத்தை கலக்கும் "டும் டும்" பாட்டு.. ஒன்னா Dance ஆடிய சித்தார்த், அதிதி.. ஹன்சிகாவின் கமெண்ட் 🥰

தொடர்புடைய இணைப்புகள்

Chiranjeevi Wishes Kushboo for Member of NCW

People looking for online information on Chiranjeevi, Kushboo Sundar, Member of NCW will find this news story useful.