www.garudabazaar.com
iTechUS

"நேத்துல இருந்து ஒரே மெசேஜ்" – அர்ஜுன் தாஸுடனான உறவு என்ன? உடைத்த ஐஸ்வர்யா லட்சுமி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் & மலையாள சினிமாவில் கதாநாயகியாக பிரபலமானவர்  ஐஸ்வர்யா லக்ஷ்மி.

Aishwarya Lakshmi Clarification about Photo with Arjun das

Also Read | விஜய் நடித்த 'வாரிசு'.. சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல TV நிறுவனம்! முழு தகவல்

மாயநதி, வரதன் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, விஷால் நடிப்பில் வெளிவந்த  'ஆக்சன்' படம் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆகியிருந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், கார்கி, பொன்னியின் செல்வன் முதல் பாகம், கட்டாகுஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா லெஷ்மி நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஏற்று நடித்த "பூங்குழலி" கதாபாத்திரத்திற்கு பிறகு அவரை பலரும் பூங்குழலி என்றே குறிப்பிட்டு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் அவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி' படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பு பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

Aishwarya Lakshmi Clarification about Photo with Arjun das

நேற்று, பிரபல நடிகரான அர்ஜுன் தாஸூடன் ஐஸ்வர்யா லெஷ்மி  எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த கைதி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அர்ஜுன் தாஸ். வில்லத்தனமான அவரது குரலும் அதிகம் கவனம் பெற்றிருந்தது. இதற்கடுத்து அந்தகாரம், விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்த அர்ஜுன் தாஸ், அநீதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

Aishwarya Lakshmi Clarification about Photo with Arjun das

இந்நிலையில், ஐஸ்வர்யா லெஷ்மி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "நண்பர்களே எனது கடைசி பதிவுகளை பற்றி, அது இவ்வளவு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திக்க நேர்ந்தது, அதனால் ஒரு படத்தை கிளிக் செய்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். வதந்திகளில் கூறப்படுவது போல் எதுவும் இல்லை.

Aishwarya Lakshmi Clarification about Photo with Arjun das

அனைத்து அர்ஜுன் தாஸ் ரசிகர்களுக்கும், நேற்று முதல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு "அவர் உங்களுடையவர்". என ஐஸ்வர்யா லெஷ்மி பதிவிட்டுள்ளார்.

Also Read | Love You-ண்ணா.. தளபதி விஜய் -யுடன் பிரபல பாடகர்.. வைரலாகும் 'வாரிசு' BTS ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Lakshmi Clarification about Photo with Arjun das

People looking for online information on Aishwarya Lekshmi, Arjun Das will find this news story useful.