www.garudabazaar.com

இணையத்தை கலக்கும் "டும் டும்" பாட்டு.. ஒன்னா Dance ஆடிய சித்தார்த், அதிதி.. ஹன்சிகாவின் கமெண்ட் 🥰

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் சேர்ந்து நடித்தனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்தனர்.

Siddharth and aditi rao dance for dum dum song hansika comments

Images are subject to © copyright to their respective owners

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருந்தார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குனராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்தனர்.‌

இந்த திரைப்படம், 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமன் இசையில் அமைந்த இந்த திருமண கொண்டாட்ட பாடல், தற்போது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

இந்த பாடல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ரிலீஸ் ஆன சமயத்தில் ட்ரெண்ட் ஆனது போல தற்போதும் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது மட்டுமில்லாமல், கோலிவுட்டை தாண்டி பாலிவுட் மற்றும் சர்வதேச அளவில் உள்ள பிரபலங்கள் பலரும் கூட இந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகர் சித்தார்த் மற்றும் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் இணைந்து டும் டும் பாடலுக்கு ஆடி உள்ள வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

சித்தார்த் மற்றும் அதிதி ஆகியோர் இணைந்து அப்படியே ட்ரெண்டிங்கில் இருக்கும் நடன அசைவுகளை மிக அற்புதமாக சேர்ந்து ஆடவும் செய்கின்றனர். மேலும் அதிதி பகிர்ந்த இந்த வீடியோவில், பல பிரபலங்களும் தங்களின் கமெண்ட்டுகளை குறிப்பிட்டு வருகின்றனர். நடிகர் ஹன்சிகா மோத்வானி, "Cute" என கமெண்ட் செய்துள்ள சூழலில், சுஹாசினி உள்ளிட்ட பலரும் நடனத்தை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Siddharth and aditi rao dance for dum dum song hansika comments

People looking for online information on Aditi Rao Hydari, Dum Dum, Hansika Motwani, Siddharth will find this news story useful.