www.garudabazaar.com

ப்பா.. என்னா உடம்பு.. பிக்பாஸ் ஆரவ்வா இது.. இப்படி ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை:  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் ஆரவ், சிக்ஸ் பேக் தோற்றத்தில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Actor Arav in Six Pack look: viral photo on instagram

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டு பிரபலமானவர்  நடிகர் ஆரவ். ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆரவ்.

இதற்கு முன்பாகவே சில படங்களில் சிறு,சிறு வேடங்களில் நடித்து இருந்தார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இந்த நிலையில். தான் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் தோற்றம் கொண்ட போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஆரவ். மேலும், அந்த டுவிட்டர் பதிவில், '' உடல்  மாற்றத்தை ஏற்படுத்துவது எப்போதுமே கனவாகவே இருந்து வருகிறது. எல்லோரையும் போலவே, கொரோனா  என்னை மிகவும் மோசமாகத் தாக்கியது.

ஆனால் நான் மீண்டும் வலுவாக வளர விரும்பினேன், அப்போதுதான் நான் முடிவு செய்தேன், நான் உடல் ரீதியாக மட்டுமல்ல, மனதளவிலும் மாற வேண்டும். எனது 6 மாத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலன் இதோ. ஆதரவளித்த எனது வழிகாட்டி @doctor.rahul மற்றும் எனது குடும்பத்தினருக்கு நன்றி'' என்றும் ஆரவ் கூறியுள்ளார். கட்டுமஸ்தான சிக்ஸ் பேக் உடலுடன் ஆரவ் இருக்கும் போட்டோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arav in Six Pack look: viral photo on instagram

People looking for online information on Actor arav, Bigboss, Bigg boss tamil will find this news story useful.