www.garudabazaar.com

‘சாப்பாட்டை குப்பையில் கொட்டிய வனிதா’.. "பொத்திட்டு இருக்கணுமா?”.. டென்ஷன் ஆன தாமரை! #BBUltimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 22, பிப்ரவரி 2022: பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முன்னதாக வனிதா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். 

vanitha throws thamarai food in dustbin bigg boss tamil

தாமரை - வனிதா

இடையிடையே வனிதாவுக்கும் அபிராமிக்கும், வனிதாவுக்கு ஜூலிக்கும் என முக்கியமான சண்டை நடந்து வந்தது. எனினும் வனிதாவுக்கும் தாமரைக்குமான சண்டை முதலில் தொடங்கி பின்னர் ஆறிவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் தாமரை மற்றும் வனிதா இருவருக்குமான சண்டை மீண்டும் தொடங்கி இருக்கிறது.

நீ செஞ்சு பாரு..

அதன்படி தாமரை சமைக்கும் உணவு பற்றி வனிதா பேச, இதனால் கடுப்பான தாமரை வனிதா சொன்ன விதம் குறித்து அவரிடம் கோபப்பட்டு கேட்கிறார். அதாவது வனிதா தாமரையிடம், “நீ சமைப்பதை பார்த்துவிட்டு நாங்கள் பொத்திக்கொண்டு உட்கார முடியாது!” என்று கூறுகிறார்.

Also Read: “என் அப்பா சாத்தான்” .. Bigg Boss வீட்டில் போட்டு உடைத்த சுருதி! எந்த மகளுக்கும் இந்த நெலமை வர கூடாது - கலங்கும் சுருதி ரசிகர்கள்

நான் கிச்சன் கேப்டன்

இதை கேட்ட தாமரை, “அப்படி எல்லாம் பேசாதீர்கள்!” என்று மீண்டும் வனிதாவிடம் சண்டை போடுகிறார். அதன் பின்னர் பேசிய வனிதா, “நான் ஒரு கிச்சன் கேப்டன் என்பதால் நான் உணவு பற்றி கேட்பேன்” என்று ஆவேசமாக கூற, அதற்கும் பதில் சொல்லும் தாமரை, “இவ்வளவு சொல்லும் நீங்கள் சமைத்து பார்த்தால் தெரியும். நீங்கள் இப்படி செய்ய முடியுமா?” என்பது போல் கேட்கிறார். 

என்னைலாம் நீ ஜெயிக்க முடியாது..

இதனால் டென்ஷனான வனிதா, தாமரையிடம், “சமையலில் என்னைலாம் நீ ஜெயிக்க முடியாது! இந்த மாதிரி பேசிக் கொண்டு இருக்காதே!” என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் வனிதா, “ஒரு சாப்பாட்டை கூட நிம்மதியாக சாப்பிட முடிகிறதா? தலை வலிக்கிறது!” என்று சொல்லி எழுந்து சென்று விடுகிறார். 

குப்பைத் தொட்டியில் கொட்டிய வனிதா

மேலும் வனிதா, தாமரை சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டுச் சென்றுவிடுகிறார். அதன் பிறகு சினேகனிடம், தாமரை தன் மனநிலையை புலம்பி தீர்க்கிறார். 

அப்போது சினேகனோ, “காக்கா வெள்ளை என்றால் அது வெள்ளை ஆகி விடுமா?” என்று சொல்லி தாமரையை தேற்றுகிறார்.

Also Read: அடக்கடவுளே! பிக்பாஸில் நிரூப் சொன்ன அதிர்ச்சி தகவல்.. இவருக்கு பின்னால இப்படி ஒரு சோகமா?

தொடர்புடைய இணைப்புகள்

vanitha throws thamarai food in dustbin bigg boss tamil

People looking for online information on BBUltimate, BBUltimateTamil, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Thamarai Selvi, Vanitha, VanithaVijayakumar will find this news story useful.