Valimai BWE
www.garudabazaar.com

"Proof இருக்கு.. நன்றி ஆரி".. BB Ultimate-ல் Demon என்று சொன்ன பாலாஜி.. 4வது சீசன் குறும்படத்தை பகிர்ந்த சனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 24, பிப்ரவரி 2022: தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களைத் தொடர்ந்து, தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில்  24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் நான்காம் வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

Sanam Shetty shares proof video Balaji Bigg Boss Tamil

நடிகர் சிம்பு

இந்த நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படத்தின் நிறைவு பணிகளுக்காக விலகுவதாக அறிவித்ததை அடுத்து, தற்போது இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Sanam Shetty shares proof video Balaji Bigg Boss Tamil

எலிமினேஷன்

இதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி, பின்னர் சுஜா வருணி வெளியேறினர். பின் இதனை மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறினர். இதனிடையே வனிதா விஜய்குமார், தமது மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கிய கருதி, தாமாகவே வெளியேறுவதாக பிக்பாஸிடம் சொல்லிவிட்டு வெளியேறினார்.

Sanam Shetty shares proof video Balaji Bigg Boss Tamil

சனம் ஷெட்டி

இந்நிலையில் இந்த வார கேப்டனாக தாமரை இருக்க, இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பாலாஜி முருகதாஸ் பேசியது குறித்த குறும்படத்தை நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sanam Shetty shares proof video Balaji Bigg Boss Tamil

Angel மற்றும் Demon

ஆம், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் Angel மற்றும் Demon என்கிற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் அவர்களுக்கான Angel மற்றும் Demon என 2 பேரின் பெயரை சொல்ல வேண்டும்.  இதில் தான், பாலாஜி முருகதாஸ் ஒரு பெயரை குறிப்பிட்டு, தமது Demon எனக் கூற, அவர் சொல்லும்போது அந்த பெயர் மியூட் செய்யப்பட்டது.

Sanam Shetty shares proof video Balaji Bigg Boss Tamil

ஆனால், பாலாஜி முருகதாஸ் சொன்ன விஷயத்தில், தான் அந்த நபரிடம் அப்படி ஒரு வார்த்தையை சொல்லவே இல்லை என்று குறிப்பிட்டு, “என்னை பற்றி தவறாக பேசி என் பெயரை கெடுத்துவிட்டார். ஒருத்தரின் கரியரை அழித்துவிட்டு அதன் மூலம் மேலே செல்ல நினைக்கிறார். குற்ற உணர்ச்சி இருக்காதா?” என்று கூறியிருந்தார். அதாவது முந்தைய பிக்பாஸ் சீசனில் நடந்த சம்பவம் தொடர்பாக பாலாஜி இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

சனம் ஷெட்டி வெளியிட்ட குறும்படம்

இந்நிலையில் தான், ரசிகரது ஒரு வீடியோவை பகிர்ந்த சனம் ஷெட்டி, “ஆதரவுக்கு நன்றி, சிலர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு அழைப்புகள் வந்தன. அவர்களது கேம் பாதிக்கக் கூடாது என கருதி நான் ரியாக்ட் பண்ணவில்லை. ஆனால் எனது இந்த நேர்மையே இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஆனால் உண்மையில் அவர் சொன்னதற்கு சாட்சி பகிரப்பட்டுள்ளது!” என்று சொல்லி அந்த சீசனில் பாலாஜியிடம் ஆரி பேசியதை பகிர்ந்த சனம் ஷெட்டி, ஆரிக்கு அந்த பதிவில் நன்றியும் கூறி இருக்கிறார்.

Also Read: "ரம்யா கிருஷ்ணனா?".. BiggBoss-ல இருந்து வெளில வந்ததும் வனிதாவின் அனல் தெறிக்கும் முதல் Post!

தொடர்புடைய இணைப்புகள்

Sanam Shetty shares proof video Balaji Bigg Boss Tamil

People looking for online information on Balaji Murugadoss, Sanam Shetty will find this news story useful.