www.garudabazaar.com

புதிய காருடன் விக்னேஷ் சிவன், நயன்தாரா.. பாடிகாட் முனீஸ்வரிடம் வேண்டிய காதல் ஜோடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் புதிய காருக்கு பூஜை போடும் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகியுள்ளது.

vignesh shivan and nayantahra found with new car for blessing

தமிழ் சினிமாவில், ஐயா திரைப்படம் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை நயன்தாரா.

அதன் பிறகு, சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோஹினி என்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் அதிக பிரபலம் அடைந்தார்.

லேடி சூப்பர்ஸ்டார்

இடையில் எந்த திரைப்படங்களும் நடிக்காமல் இருந்து வந்த நயன்தாரா, சிறிய இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். ராஜா ராணி, அறம், விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்து மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார் நயன்தாரா. அது மட்டுமில்லாமல், லேடி சூப்பர்ஸ்டார் என்ற பெயரும் நயன்தாராவுக்கு வந்து சேர்ந்தது.

புதிய திரைப்படங்கள்

இவரது நடிப்பில் கடைசியாக நெற்றிக்கண், அண்ணாத்த படங்கள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். இது போக சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், காட்பாதர் படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது.

vignesh shivan and nayantahra found with new car for blessing

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வெளியூர் செல்லும் போதும், எங்காவது கோவிலுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், அது தொடர்பான புகைப்படங்களை பகிர்வார். சமீபத்தில், காதலர் தினத்தன்று கூட, நயனுடன் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

புதிய காருக்கு பூஜை

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், தாங்கள் வாங்கியுள்ள புதிய இன்னோவா காருக்கு பூஜை போடும் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகியுள்ளது. பாடிகாட் முனீஸ்வரன் கோவில் அருகே இருவரும் தங்களின் புதிய காருடன் ஆண்டவனின் ஆசீர்வாதம் வாங்க நின்ற புகைப்படங்களை நயன்தாராவின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

vignesh shivan and nayantahra found with new car for blessing

தொடர்புடைய இணைப்புகள்

vignesh shivan and nayantahra found with new car for blessing

People looking for online information on Lady Superstar, Nayanthara, New Car, Vignesh shivan will find this news story useful.