www.garudabazaar.com

BiggBoss ‘ஆரி’ நடிக்கும் புதிய படம் .. டைட்டில் ஓகே? அதென்ன NGF? வைரல் ஆகும் first look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 13, பிப்ரவரி 2022: எஸ்.ஏ.எஸ் யோகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் பிக்பாஸ் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார்.‌

bigg boss tamil winner aari new film ooty backtrop

பிக்பாஸ் வின்னர் ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி. முன்னதாக நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

ஏலியன்ஸை மையமாகக் கொண்ட இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படத்தை அடுத்து ஆரி, தொடர்ந்து பல புராஜெக்ட்களை கையில் வைத்திருக்கிறார்.

ஆரி நடிக்கும் புது படம்

இந்த நிலையில்தான் நடிகர் ஆரி நடிப்பிலான ‘TN-43’ என்கிற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரில் THE NGF என்கிற சொல் இடம் பெற்றுள்ளது, அப்படி என்றால் என்ன? என்று ஆரி, தமது ரசிகர்களை கெஸ் பண்ண சொல்லி கேட்டுள்ளார். இதனால் ரசிகர்களிடத்தில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பக்குழு விபரம்

இந்த திரைப்படத்துக்கு ஸ்ரீ சாய் தேவ இசையமைக்கிறார். கே.ஜி.ரத்தீஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் லோகேஷ் இந்த திரைப்படத்தை எடிட்டிங் செய்கிறார், கலைப்பணியை எஸ்.ஜே.ராம், ஒப்பனையை வெங்கடேஷ்வர ராவோ கவனித்துக்கொள்ள, காஸ்டியூமராக ரமேஷ் மற்றும் மக்கள் தொடர்பாளராக நிகில் முருகன் பணிபுரிகிறார்.

இப்படத்துக்கு கவிஞர் விவேகா பாடல்களை எழுதுகிறார். பாடலாசிரியர் விவேகா அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் எழுதிய ஓ சொல்றியா பாடல் பெரும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த 2 கட்டமாக படப்பிடிப்பை தொடரவுள்ளார்கள்.

டைட்டிலுக்கு இதுதான் அர்த்தம்

இப்படம் குறித்து இயக்குநர் மணி வர்மன் கூறும்போது, “ஊட்டி பின்னணியில் இதுவரை யாரும் சொல்லப்படாத, பக்கா ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகும், இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. ஆம், டைட்டில் ‘TN-43’ என்பது நீலகிரியை குறிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இளையராஜா இசையில் பிரஜன் நடிக்கும் புதிய படம்.. யுவன் வெளியிட்ட First Look! ஹீரோயின் யாரு?

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss tamil winner aari new film ooty backtrop

People looking for online information on Aari, Bigg boss aari, Bigg boss tamil winner, Bigg boss tamil winner aari, Mani Varman, Sree Sai Dev V, Viveka will find this news story useful.