www.garudabazaar.com

"இதுவரை 5 Bigg Boss-லயும் ஒரே ஒரு பொண்ணு தான் ஜெயிச்சாங்க... ஆனா அவங்க Bold இல்ல" - Vanitha

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சி, 06 பிப்ரவரி 2022:- டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

only one girl won Bigg Boss Tamil not bold too Says vanitha

பிக்பாஸ் ஓடிடி

இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முதல் வாரம் நடந்த செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க், நாமினேஷன், பிக்பாஸின் கேள்விகள் என அனைத்தும் பிப்ரவரி 6-ஆம் தேதி விஜய் டிவியில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஒளிபரப்பானது.

வனிதாவிடம் அனிதா, சுருதி கேள்வி

இதில் வனிதாவிடம் செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க்கில், பிர்பல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், “நீங்கள் ஏன் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறீர்கள்?” என கேட்டுள்ளார். இதேபோல் பிக்பாஸ் 5வது சீசன் போட்டியாளர் சுருதி, “லீகல் ஒப்பந்தங்களை நீங்கள் படித்தீர்களா?” என்றும் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் சொன்ன வனிதா விஜயகுமார்,  “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான அக்ரீமெண்ட்டை நான் டிஸ்னியுடன் தான் கையெழுத்திட்டிருக்கிறேன். எனவே லீகல் விஷயங்களை இங்கு சொல்வதற்கில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின் என் போராட்டங்கள் மாறின. நான் எடுத்த சரியான முடிவு இது.” என்று கூறினார்.

24 மணி நேரமும் என்பதால் தான் வந்தேன்

குறிப்பாக, “பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அதனால் நாள் முழுவதும் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் ஓடிடியில் 24 மணி நேரமும் நடப்பதை காட்டப் போகிறார்கள் என்பதால் தான் நான் இந்த முறை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். இல்லையென்றால் வந்திருக்கவே மாட்டேன்.” என்று கூறினார்.

ஆனா அவங்க Bold இல்ல

மேலும் பேசிய வனிதா விஜயகுமார், “முந்தைய சீசனில் இதுவரை ஒரே ஒரு பெண் மட்டும் ஜெயித்திருக்கிறார். அவரும் வாழ்க்கை அனுபவங்களை கடந்த Bold-ஆன பெண்மணி அல்ல. ஒரு இளம்பெண் தான். எனக்குப் பர்சனலாக தெரியும். நிறைய பேசிக்கொள்வோம். அதேசமயம் எனக்கு 40 வயது ஆக போகிறது. கணவர் இல்லை.  இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது. இப்படி தனி போராட்டத்தை முன்னெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்னுடைய வெற்றி என்னை போல பல பெண்களுக்கும் தன்னம்பிக்கை தரும் விதமாக அமைய வேண்டும் என்பதே நான் பிக்பாஸில் ஜெயிக்க வந்ததற்கான முக்கிய காரணம்!” என்று கூறினார்.

பிக்பாஸ் அல்டிமேட்

இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எனினும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொலைக்காட்சி வெர்ஷன் போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. இதையே தான் நடிகை வனிதா விஜய்குமார் சுட்டிக்காட்டி, இதனால் தான் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

only one girl won Bigg Boss Tamil not bold too Says vanitha

People looking for online information on BB Ultimate, BBUltimate Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Riythvika, Vanitha Vijayakumar will find this news story useful.