www.garudabazaar.com

AjithKumar: துபாயில் குடும்பத்துடன் சுற்றுலா.. டிரெண்டாகும் நடிகர் அஜித்குமாரின் புதிய வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. 

அடுத்ததாக நடிகர் அஜித், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார், தமது குடும்பத்துடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டன. மேலும் டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின.

இந்த நிலையில்   அனோஷ்கா & ஆத்விக் உடன் அஜித் & ஷாலினி கடலில் சவாரி செய்ய போகும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அங்குள்ள ஊழியர்கள் ஷாலினி அஜித்குமாரிடம் நன்றி கூறுவதும் பதிலுக்கு ஷாலினி அஜித்குமார் நன்றி கூறுவதும் வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.

AJITHKUMAR: துபாயில் குடும்பத்துடன் சுற்றுலா.. டிரெண்டாகும் நடிகர் அஜித்குமாரின் புதிய வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video

People looking for online information on Ajith Kumar, AK62, Shalini ajithkumar will find this news story useful.