உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக பழம்பெரும் பாலிவுட் நடிகர் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி
முகப்பு > சினிமா செய்திகள்பாலிவுட் நடிகர் சமீர் காகர் இன்று உடல் உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71.
நக்கட், ஷாருக்கான் நடித்த சர்க்கஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான பழம்பெரும் நடிகர் சமீர் காகர் புதன்கிழமை இன்று சமீரின் உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார் என்று அவரது சகோதரர் கணேஷ் காகர் அறிவித்துள்ளார். சமீருக்கு சுவாசப் பிரச்சினைகள் மற்றும் சிறுநீர் பிரச்சினைகள் இருந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீர் காக்கர், நக்கட், மனோராஜன், சர்க்கஸ், நயா நுக்கட், ஸ்ரீமான் ஸ்ரீமதி மற்றும் அதாலத் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் 'பேசும்படம்' (1987), ஜாக்கி ஷெராஃப் மற்றும் அனில் கபூர் நடித்த 'பரிந்தா' (1989), அஜய் தேவ்கன் மற்றும் சுனில் ஷெட்டியின் 'தில்வாலே' (1994), சல்மான் கான் நடித்த 'ஜெய் ஹோ' (2014), சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் பரினீதி சோப்ராவின் 'ஹஸீ தோ ஃபேஸி' (2014), சுதிர் மிஸ்ரா-இயக்குனர் 'சீரியஸ் மென்' (2020). போன்ற திரைப்படங்களில் சமீர் நடித்துள்ளார்.
சமீர் காகர் இறுதிச்சடங்கு போரிவலியில் உள்ள பாபாய் நாகா சுடுகாட்டில் நடைபெற்றது. ட்விட்டரில், திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, சமீரின் புகைப் படங்களைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.