www.garudabazaar.com

"விடுதலை -ல நடிச்சது".. அப்பவே நடந்தா ராஜீவ் மாதிரி மாப்பிள்ளை வேணும்ன்னு.. Fun ஷேரிங்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராக இருப்பவர் ராஜீவ் மேனன். பாம்பே, குரு, கடல் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ராஜீவ் மேனன், மின்சாரக்கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சர்வம் தாள மாயம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

Rajiv Menon opens ub about acting in viduthalai movie

Images are subject to © copyright to their respective owners

ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என இயங்கி வந்த ராஜீவ் மேனன், வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கேமரா பின்பக்கம் நின்றே ராஜீவ் மேனனை அனைவரும் பழக்கப்பட்ட சூழலில், தற்போது நடிகராகவும் களமிறங்கி உள்ளது பலர் மத்தியில் கவனம் பெற்றும் வருகிறது.

இதனிடையே, "கருவின் காரிருள்" என்ற பாடல் ஒன்றின் தொடர்பாக இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், பாடகர் உன்னிகிருஷ்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.

இதில், அனைவருமே சினிமா அனுபவம் குறித்து ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். முன்னதாக, ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என அறியப்பட்ட ராஜீவ் மேனன், விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலரில் அவர் தோன்றும் காட்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படி இருக்கையில், விடுதலை படத்தில் ராஜீவ் மேனன் நடித்தது குறித்து நெறியாளர் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் மணிரத்னம் கேட்டும் நடிக்காத ராஜீவ் மேனன், தன்னுடைய திரைப்படத்தில் சும்மா கேட்ட போதே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டதை பற்றி கேள்வி எழுப்பி இருந்த நெறியாளர் "எனக்கு தெரிஞ்சு அப்பவே ஒத்துக்கிட்டு இருந்தா அரவிந்த் சாமி மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்ன்னு கேக்குறப்போ ராஜீவ் மேனன் மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்னு கேட்டுருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லைன்னு நினைக்கிறேன்" என சொல்லி முடித்ததும், "இப்ப ராஜீவ் மாதிரி ஒரு தாத்தா வேணும்ன்னு ஆசைப்படுறாங்க" என சிரித்துக்கொண்டே கூறினார்.

அதேபோல இனிமேல் அடுத்தடுத்து நடிகராக பார்க்கலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜீவ் மேனன், "அதெல்லாம் எனக்கு தெரியாது. எல்லாம் இந்த ஃபர்ஸ்ட் பால் தான். அடுத்த பால் என்ன வரும்னு இருக்காது. இந்த பந்துல மட்டும் தான் கவனம் இருக்கும்" என தெரிவித்தார். விடுதலை படத்தை தொடர்ந்து சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கும் Weapon என்ற திரைப்படத்திலும் ராஜீவ் மேனன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

"விடுதலை -ல நடிச்சது".. அப்பவே நடந்தா ராஜீவ் மாதிரி மாப்பிள்ளை வேணும்ன்னு.. FUN ஷேரிங்ஸ்!! வீடியோ

Rajiv Menon opens ub about acting in viduthalai movie

People looking for online information on Madhan Karky, Rajiv Menon, Unni Krishnan, Viduthalai will find this news story useful.