பிறந்தநாளில் பாடல் பதிவு - சிவகார்த்திகேயன் பட இயக்குநர் மகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தின் பாடல் பதிவு செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

A Song from Sivakarthikeyan's SK16 has been recoreded on Pandiraj's Birthday

Mr.லோக்கல் திரைப்படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் ‘SK14’ திரைப்படத்திலும், ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'SK16' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மனுவேல், முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, சூரி, நடராஜன், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடலை, பதிவு செய்துள்ளனர். இதனை புகைப்படத்துடன் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.