'சர்கார்' விஜய் ஸ்டைலில் அமெரிக்காவில் இருந்து வாக்களிக்க வரும் தமிழர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான அரசியல்கட்சிகளின் பிரச்சாரம் 16 ஆம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. இதில் பண விநியோகம் காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

A man will come for Election in Vijay's Sarkar Style

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர், தான் அமெரிக்காவில் அல்டாண்டாவில் இருந்து வாக்களிப்பதற்காக இந்தியா வருவதாகவும், கமல்ஹாசனை குறிப்பிட்டு, இணைந்து மாற்றத்தை கொண்டுவரலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தி வரும் நிலையில், வெளிநாட்டில் பணி செய்துவந்தாலும் தன்னுடைய வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அவரது எண்ணம் மதிப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. அவரது இந்த செயல் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.