பிக் பாஸ் பிரபலத்துடன் யோகி பாபு நடித்துள்ள படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 02, 2019 07:56 PM
யோகி பாபு, யாஷிகா நடிப்பில் உருவாகி வரும் ஜாம்பி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பல சமூக வலைத்தள சென்சேஷன் பிரபலங்கள் நடிக்கின்றனர். எஸ்3 பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை புவன் நல்லன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘இசை காட்டேரி’ பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
சென்னை-புதுச்சேரி இடையே ஈ.சி.ஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி, இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தெரிகிறது. ஜாம்பி திரைப்படம் வரும் ஆகஸ்ட்.30ம் தேதி ரிலீசாகிறது.
இத்துடன் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’, பாகுபலி பிரபாஸ் நடித்துள்ள ‘சாஹோ’ உள்ளிட்ட திரைப்படங்களும் ஆக.30ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.