செம்ம..! தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆன 90S இளசுகளின் ஃபேவ்ரைட் திரைப்படம் "காதல் தேசம்"..!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட கதைகளை தேர்ந்தெடுத்து புதிய இயக்குனர்களை வைத்தும், பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் கே.டி.கே என்றழைக்கப்படும் மெகா புரோடியூசர் 'ஜென்டில்மேன்' கே.டி. குஞ்சுமோன்.

Also Read | 'கட்டா குஸ்தி' பிஸினஸ் மட்டும் இத்தனை கோடியா? விஷ்ணு விஷால் சொன்ன சூப்பர் தகவல்!
இவர் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற பல படங்கள் வினியோகஸ்தர்களுக்கு வசூல் சாதனை படைத்த படங்களாகும். பிரமாண்டமாகவும், ஒலி ஒளி நேர்த்தியாகவும் படைக்கப்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படங்களாக தயாரித்தவர் கே.டி.கே.
இந்நிலையில் கே.டி.கே, தான் தயாரித்த "காதல் தேசம்" படத்தை முதல் கட்டமாக தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்கிறார். இளைஞர்களை காதலில் கிறங்கடித்த இந்த படம், இசை நேர்த்தியுடன் புதிய கலர் சேர்ப்பில் தெலுங்கில் #பிரேமதேசம் என்ற பெயரில் புத்தம் புது காப்பியாக வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 200- க்கும் அதிகமான திரை அரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டு சாதனை படைத்துள்ளார் கே.டி.கே.
இவரது தயாரிப்புகளுள் ஒன்று காதல் தேசம். நடிகர்கள் வினீத், அப்பாஸ், தபு ஆகியோர் நடித்து கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பயணத்தில் காதல் தேசம் திரைப்படம் முக்கியமாக அமைந்தது . படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் முணு முணுக்கப்பட்டு பிரபலமடைந்தது. இதில் வரும் முஸ்தஃபா முஸ்தஃபா பாடல் தலைமுறைகளை தாண்டி இன்றும் பிரபலம்.
சமீபத்தில் மறைந்த பிரபல டைரக்டர் கே.வி.ஆனந்த் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படமும் இதுவே. 1996-ல் இப்படம் வெளியிட்டபோது ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஒரு வருடங்களுக்கு மேல் திரையிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்களும் மக்களை வியப்படைய வைத்தது.
இதனிடையே தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் அடுத்து தயாரித்து வரும் "ஜென்டில்மேன்2" படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளும் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இதேபோல் ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் டிசம்பர் 10-ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
PRO: ஜான்சன்.
Also Read | நயன்தாரா & சத்யராஜ் நடிக்கும் 'CONNECT'.. அள்ளு விடும் அட்டகாசமான ஹாரர் டிரெய்லர்!