Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

90S ‘மர்மதேசம்’ சீரியல் நடிகர் லோகேஷ் மரணம்.. மன உளைச்சலால் இப்படி பண்ணிட்டான்.. தந்தை உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொடர்களில் ஒன்றான மர்ம தேசம் தொடரில் ராசு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற லோகேஷ் ராஜேந்திரன், ஜி பூம்பா என்ற இன்னொரு புகழ்பெற்ற தொடரிலும் நடித்தவர்.

90S Kid serial actor lokesh demise his father emotional

மர்ம தேசம் விடாது கருப்பு உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சன் டிவி மற்றும் ராஜ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி இப்போதும் பல ரசிகர்களை இந்த தொடர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மறு ஒளிபரப்பிலும் இந்த தொடர் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் விஜயகாந்த் நடித்த கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் லோகேஷ் ராஜேந்திரன் நடித்துள்ளார். லோகேஷ் ராஜேந்திரன், இயக்குனராக 6 அத்தியாயம் என்ற ஆந்தாலஜியில் சூப் பாய் சுப்பிரமணி என்ற ஒரு குறும்படத்தையும் இயக்கியவர். இந்நிலையில்தான் லோகேஷ் ராஜேந்திரன், தனது உயிரை மாய்த்துக் கொண்ட விஷயம் சின்னத்திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. லோகேஷ் ராஜேந்திரன் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இயக்குனர் சுரேஷ் தனது முகநூல் பக்கத்தில், " உயிரை மாய்த்துக் கொள்வது எதுக்கும் முடிவல்ல மச்சி ... இவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தும் இந்த முடிவு எடுத்திருக்க கூடாதுடா... மர்ம தேசத்தில் குழந்தையாக தொடங்கிய உன் பயணம் இப்படி முடிந்திருக்க கூடாது 😢😢😢 பெரிய இயக்குநரா ஜெயிச்சிருக்க வேண்டியவன் நீ.. Miss you machi Lokesh Rajendran.. RIP" என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் லோகேஷின் தந்தை செய்தியாளர்களிடம் பேசும்போது, “அவன் சிறந்த குழந்தை நட்சத்திரம் நடிகர் விருது பெற்றான். விஜயகாந்த், பிரபு, பார்த்திபன் என முன்னணி நடிகர்கள் 15  பேரின் படங்களில் நடித்தான். 150 சீரியல்களில் நடித்தான். சினிமா பாரம்பரிய குடும்பமாக வளராமல் சொந்த திறமையால் வளர்த்தேன். அவனும் அப்படியே வளர்ந்தேன்.

காதல் திருமணம் செய்தான். எப்போதாவது தான் அதன் பின்பு வீட்டுக்கு வருவான். எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. சமீபமாக குடும்பத்தில் உண்டான கசப்பு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டதாக போலீஸார் சொன்னார்கள். எதனால் என்று எனக்கும் தகவல் தெரியாது.” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறை, தற்கொலை தடுப்பு தொடர்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

90S Kid serial actor lokesh demise his father emotional

People looking for online information on Lokesh, Lokesh Rajendran, Marma desam will find this news story useful.