www.garudabazaar.com

மருத்துவமனையில் நடிகர் எஸ்வி சேகர்.. ஆயில் மசாஜால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நாடக & சினிமா நடிகராக அரசியல்வாதியுமாக அறியப்படுபவர் எஸ்வி சேகர்.

Veteran Actor Sve Shekher Hospitalised due to acute vertigo

Also Read | போடு! மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் இணைந்த த்ரிஷா.? தெறிக்கவிடும் அப்டேட்.!

பிரபல காமெடி நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆயில் மசாஜ் எடுத்ததால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் காமெடி நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் நடிகர் எஸ்வி சேகர்.

Veteran Actor Sve Shekher Hospitalised due to acute vertigo

இவர் பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளார். இவர் அதிமுக கட்சியின் சார்பில் 2006-11 ஆம் ஆண்டுகளில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார்.  தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள மெட்ராஸ் ஈஎன்டி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Veteran Actor Sve Shekher Hospitalised due to acute vertigo

அந்த பதிவில், "கடுமையான வாந்தியுடன் கூடிய கடுமையான தலைச்சுற்றல் காரணமாக ஆர் ஏ புரத்தில் உள்ள மெட்ராஸ் ENT மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டேன். இந்த விளைவை ஏற்படுத்திய ஆயில் மசாஜ் செய்ததற்கு எனது ஆர்வக்கோளாறு தான் காரணம். கடவுள் அருளால் & டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிகிச்சையால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இப்போது வீட்டில் முழு ஓய்வு எடுக்கிறேன். ஒவ்வொரு நாளும் நாம் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை இனி  ஆயில் மசாஜ்கள் செய்ய கூடாது என்று கற்றுக் கொண்டேன் 🙏🙏🙏🇮🇳        உங்கள் பிரார்த்தனைகளுக்காக அனைவருக்கும் நன்றி" என எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார்.

Also Read | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் குக் வித் கோமாளி புகழ் & சக்தி.. வைரல் வீடியோ

Veteran Actor Sve Shekher Hospitalised due to acute vertigo

People looking for online information on Acute vertigo, S Ve Shekher, S ve Shekher admit in Hospital, Veteran Actor will find this news story useful.